வெற்றிமாறன் படத்திற்காக மீண்டும் சிக்ஸ் பேக்.. நடிகர் சூரியின் வெறித்தனமான நியூ லுக்..!

தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வளம் வருபவர் காமெடி நடிகர் சூரி. சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் சுந்தர பாண்டியன், வருத்தப்படாதா வாலிபர் சங்கம், பாண்டிய நாடு, ஜில்லா, ரஜினி முருகன் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். தற்போது இவரின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் அளவிற்கு வளந்துவிட்டார் காமெடி நடிகர் சூரி.

 

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என மாபெரும் வெற்றி படங்களை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இப்படைப்புகளின் வெற்றியை தொடர்ந்து கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் சூர்யாவுடன் வாடிவாசல் மற்றும் சூரியுடன் ஒரு படம் என கமிட்டாகிவுள்ளார் வெற்றிமாறன்.

சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்திற்காக சூரி தாடி, மீசை என செம்ம மாஸ் கெட்டப் ஒன்றில் இருந்து வந்தார். அந்த புகைப்படம் கூட இணையத்தில் மிகவும் வைரலானது. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடிக்கவிருக்கும் படத்திற்காக சீமராஜா படத்திற்கு பிறகு மீண்டும் சிக்ஸ் பேக் வைத்து தனது உடலை மிகவும் ஃபிட்டாக மாற்றியுள்ளார்.