தல அஜித்தின் வலிமை படம் குறித்து வெளியான அப்டேட்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தல அஜித். தமிழ் திரையுலகில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படம் நடிகர் தல அஜித். இன்றுவரை, அஜித் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். இவர் நடிப்பில் கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளிவந்தது.

 

கடந்த வருடம் 2 படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்தார். தல ரசிகர்களே அதை எதிர்ப்பார்க்கவில்லை என்று தான் கூற வேண்டும். இப்போது அவர் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் இயக்கத்திலேயே வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பது மட்டும் இப்போதைக்கு வந்த தகவல். இதில் வில்லனாக இளம் நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார் என செய்திகள் வந்துவிட்டது.

அண்மையில் அவருக்கு பிறந்தநாள், தல ரசிகர்கள் அவரை வாழ்த்து மழையில் நனைத்துள்ளனர். அந்த சந்தோஷத்தில் கார்த்திகேயா தனது டுவிட்டரில், தல ரசிகர்கள் வாழ்த்து சொன்னதற்கு நன்றி. கொஞ்சம் பொறுமையா இருங்க, நீங்க எதிர் பார்த்தத விட சிறப்பான ஒரு அப்டேட் வர போகுது என பதிவு செய்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் படு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.