நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி வீட்டில் இருந்த கடிதம்!! மெய்சிலிர்க்க வைத்த நிகழ்வு- இதோ..!

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும், காமெடி பிரபலமுமான வடிவேலு பாலாஜி உயிரிழந்தார். அது இது எது, ஜோடி நம்பர் ஒன் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

வைகைப் புயல் வடிவேல் போன்ற உடல் மொழியில் ரசிகர்ளை கவர்ந்த வடிவேல் பாலாஜி, பெண் கெட்டப்புகளிலும் கலக்கியிருந்தார். அவரின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்றாக அமைந்தது. அவரின் மறைவை தாங்க முடியாது அவரின் குடும்ப உறுப்பினர்கள் இருக்க அவருடன் இணைந்து பலரையும் சிரிக்க வைத்து மகிழ்ந்து நிகழ்ச்சி செய்த அனைவரும் கண்கலங்கி போயுள்ளனர். அவரின் நினைவிற்காக தற்போது மிஸ் யூ வடிவேல் பாலாகி என நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு முறை அவரின் வீட்டில் அனைவரும் வெளியே திருவிழாவிற்கு சென்றிருந்த சமயத்தில் திருடர்கள் உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்த போது கடைசியில் வடிவேலுயின் வீடு என்பது தெரிந்து எதையும் கொள்ளையடிக்காமல் சென்றதோடு, கைப்பட மன்னிப்பு கடிதத்தையும் அந்த திருடர்கள் எழுதி வைத்து சென்றுள்ளனராம். இந்த புரமோவில் பழனி கூறுகிறார் பாருங்கள்..