பிக் பாஸ் வீட்டில் எதிர்பாரா திருப்பம்? ஆரம்பித்த குரூப்பீஷத்திற்கு கமல் வைத்த ஆப்பு! வெளியான ப்ரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4ம் திகதி ஆரம்பித்து தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தினம்தோறும் வெளியாகி வரும் ப்ரோமோக்களும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. கடந்த சில நாட்களாக சண்டை இருந்த நிலையில் இப்போது போட்டிகள் நடந்து வருகிறது.

அண்மையில் இந்த நிகழ்ச்சியின் 17வது போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் வரவால் கலப்பாக மாறியுள்ளது. தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டிற்கு வந்ததுமே சுரேஷ் சக்ரவத்தி அவர்களை கலாய்த்து பல கலாட்டாக்களை செய்து வருகிறார். அடுத்தடுத்து நிறைய போட்டிகள், சண்டைகள் என பிக்பாஸ் வீடே பரபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் இன்று கமலின் வருகைக்காக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஏனெனில் இதற்குக் காரணம் நேற்று தலைவர் போட்டிக்கு நிகழ்ந்த சம்பவமே. இதில் ரியோ ராஜ், வேல் முருகன், கேப்ரியலா பங்கேற்றனர். ஆம் இதுவரை வில்லனாக தெரிந்த நபர் தற்போது ஒட்டுமொத்த மக்களின் மனதையும் வென்றுள்ளார். மேலும் உள்ளே குரூப்பீஸம் இல்லை என்று கூறி சண்டையிட்ட போட்டியாளர்கள் பலரின் முகத்திரை தற்போது கிழியத் தொடங்கியுள்ளது.