பெரும் சாதனை செய்த படம்! உயரிய விருது பெற்ற லட்சுமி ராமகிருஷ்ணன்..!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சினிமாவில் குணசித்திர வேடங்களாக இருந்தாலும் சரி, அம்மாவாக இருந்தாலும் சரி யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனி ஃபேன்ஸ் உண்டு. லட்சுமி ராமகிருஷ்ணன் 1970ஆம் ஆண்டு கேரளாவின் பாலகாட்டில் பிறந்தவர். அவருடைய கணவர் ராமகிருஷ்ணன் ஐஐடி ல் படித்து வெளிநாடுகளில் வேலை செய்து வந்தார்.

ஓமன் நாட்டில் கணவருடன் வாழ்ந்து வந்தார், பின்பு தனது மூன்று செல்ல மகள்களின் கல்விக்காக கனவருடன் கோயமுத்தூர் வந்து செட்டில் ஆனார். நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் சினிமாவில் நடிகையாகவும், சமூக நீதி கதைகள் கொண்ட படங்களை எடுத்து இயக்குனராகவும் செயலாற்றி வந்தார். சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பல சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்தார்.

ஆரோஹனம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களையும் இயக்கியிருந்தார். நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ, நேர்கொண்ட பார்வை என்ற டிவி நிகழ்ச்சிகளையும் செய்து வருகிறார். கடந்த வருடம் அவர் இயக்கத்தில் வெளியான ஹவுஸ் ஓனர் படத்திற்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. இதே போல நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கும் விருது கொடுக்கப்பட்டுள்ளது.