திருமணத்தில் வனிதாவிற்கு ஏற்பட்ட தோல்வி… வாடி போடி என்று தி ட்டு வாங்கிய லட்சுமிராமகிருஷ்ணன் போட்ட ட்விட்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் தான். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான தான். பீட்டர் பவுல் என்பவரை மூன்றாம் முறையாக திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வனிதா மூன்றாம் திருமணம் செய்துகொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பவுலின் மனைவி எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த விஷயம் சமூக வலைதளத்தில் சில காலம் பேசும் பொருளாக இருந்து வந்தது. இந்த விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் தங்கள் கருத்தை தெரிவிக்க பின்னர் அது குழாய் அடி சண்டை ரேன்ஜிக்கு மாறியது. அதிலும் தனது திருமண விஷயத்தில் தலையிட்டதால் அதிலும் ராமகிருஷ்ணனை லைவ் பேட்டியில் வாடி போடி என்று படு மோசமாக பேசி அசிங்கப்படுத்தினார் வனிதா. இதையடுத்து தன்னை அவதூறாக பேசி விட்டார் என்று வனிதா மீது லட்சுமி ராமகிருஷ்ணனும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்து தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதாவும் மாறி மாறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள்.

இந்த பிரச்சனை சென்று கொண்டே இருக்க இனி வனிதா விஷயத்தை பற்றி நான் பேசவே மாட்டேன் என்று ட்விட்டரில் கூறிவிட்டார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். பின்னர் எத்தனையோ கூறிவிட்டார் பின்னர் இந்த பிரச்சனை ஓய்ந்தது. இப்படி ஒரு நிலையில் தான் வனிதா, பீட்டர் பவுலை பிரிந்ததாக அறிவித்தார்.

அதேபோல பீட்டர் பிரிந்த சோகத்தில் இருக்கும் வனிதா இனி கொஞ்சம் நாள் தான் சமூகவலைதளத்தில் வரமாட்டேன் என்றும் கூறியிருந்தார். வனிதா, பீட்டர் பவுலை பிரிந்துவிட்டதாக அறிவித்தவுடன் பலரும் வனிதாவை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள். அதிலும் குறிப்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன், கஸ்தூரி, சூர்யா தேவி என்று பலரும் வனிதா பீட்டர் பவுல் பிரிந்த பின்னர் வனிதாவை விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருந்தனர்.

வனிதாவை லட்சுமி ராமகிருஷ்ணன் ஏன் இதை பற்றி பேசவே இல்லை என்று பலரும் ட்விட்டரில் கேட்டுகொண்டே இருந்தனர். இப்படி ஒரு நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் டீவீட் ஒன்றை போட்டுள்ளார். அதை நீங்களே பாருங்க