நடிகர் இமான் அண்ணாச்சி மனைவி யார் தெரியுமா ?? பலருக்கும் தெரியாத விஷயம் !! அசரவைக்கும் புகைப்படங்கள் இதோ !!

இமான் அண்ணாச்சி தமிழ் நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டிஸ் சுட்டிஸ் போன்ற சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களித்துவருகிறார்.

மக்கள் தொலைக்காட்சியில் “சொல்லுங்கண்ணே சொல்லுங்க” என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார். அதே பெயரில் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைத் தொடர்ந்தார். உடன் குட்டீஸ் சுட்டிஸ் என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியிலும் பணியாற்றினார்.

2006ல் சென்னை காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகரானார். மரியான், நையாண்டி (திரைப்படம்) போன்ற தனுஷின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார்.  படங்களில் நடித்தாலும் சின்ன குழந்தைகளை வைத்து அவர் நடத்தும் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி மிக பிரபலம்.

அதன் இரண்டாவது சீசன் இன்னும் இரண்டு மாதங்களில் துவங்குகிறதாம்.  இந்நிலையில் இமான் அண்ணாச்சி அளித்துள்ள புதிய பேட்டியில் தன்னுடைய மனைவி பற்றி பேசியுள்ளார். இமான் ஒரு சிறிய பள்ளியில் தான் படித்தாராம், அதில் மொத்தமே இரண்டு ஆசிரியர்கள் தான் இருப்பார்களாம். அதில் ஒருவர் தான் பச்சமுத்து என்கிற ஆசிரியர்.

அவரது மகளை தான் இமான் அண்ணாச்சி காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.தற்போது அவரது மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.