நள்ளிரவில் சொகுசுக் காரில் சென்று கணவன்-மனைவி செய்த செயல் : காட்டிக் கொடுத்த சிசிடிவி..!

தமிழகத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் சொகுசு காரில் சென்று தி.ருட்டு செயல் செய்து வந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. சென்னை பாடி ஜெகதாம்பிகை நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் பூபாலன் (37).

இறைச்சி கடை நடத்தி வரும் இவரது கடையில் கடந்த மாதம் 29-ஆம் திகதி கடைக்கு வெளியே கூண்டில் வைக்கப்பட்டிருந்த 15 நாட்டுக்கோழிகள் திருடு போயுள்ளது.

இதைத் தொடர்ந்து, கொரட்டூர், போத்தியம்மன் கோயில் தெருவை சேர்ந்த இந்திரா (56), என்பவரின் வீட்டு முன்பு கட்டி வைத்திருந்த 2 ஆடுகள், கடந்த மாதம் 2-ஆம் திகதி இரவு காணமல் போயுள்ளது. இது குறித்து இந்திரா காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவே, பொலிசார் அங்கிருக்கும் சிசிடிவி கமெராக்களை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

அப்போது, அப்பகுதி வழியே வந்த சொகுசு காரில் இருந்து கைக் குழந்தையுடன் இறங்கிய ஆண் மற்றும் பெண், குறித்த ஆடு மற்றும் கோழிகளை தி.ருடிச் சென்றுள்ளது அம்பலமானது.

ஆனால், அவர்கள் யார் என்பது தெளிவாக தெரியாத காரணத்தினால், பொலிசார் வண்டி எண்ணை வைத்து வி.சாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கொரட்டூர் 200 அடி சாலையில் பொலிசார் நேற்று வாகன சோ.தனையில் ஈடுபட்ட போது, பொலிசார் தே.டப்பட்ட கார் அவ்வழியாக வந்துள்ளது.

அதை நிறுத்தி சோ.தனையிட்டபோது, காரில் ஒரு ஆணும், பெண்ணும் கைக் கு.ழந்தையுடன் இருந்தனர். வி.சாரணையில், அவர்கள் ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த அஷ்ரப் (38), அவரது மனைவி லட்சுமி (36) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் நள்ளிரவில் காரில் வந்து, பல்வேறு பகுதிகளில் நோட்டமிட்டு சாலையோரம் உள்ள கோழி, ஆடுகளை திருடி அதை மறுநாள் விற்றுவிடுவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்களை கைது செய்த பொலிசார், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.