பட வாய்ப்பு இல்லாத நடிகர் ராஜா எப்படி இருக்கார் தெரியுமா…? புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்

‘என் உண்மையான பெயர், வெங்கடேஷ். படத்துக்காக என் பெயரை மாத்துனது பாரதிராஜா சார். அதுவும் படத்துக்கான பிரஸ் மீட் நடந்துக்கிட்டு இருக்கும்போது, ‘வெங்கடேஷ் தமிழ் பெயர் நடந்துக்கிட்டு இல்லைடா… வேற பெயர் ஏதாவது சொல்லு, வெச்சிடுவோம்!’னு கேட்டார். ‘பரத்’னு நான் சொல்ல, ‘இல்லைடா பரத் நல்லாயில்லை.

என் பெயர்ல பாதியை வெச்சிக்கோ. ராஜாதான் இனி உன் பெயர்’னு சொல்லி, எல்லோருக்கும் என்னை ராஜாவாக அறிமுகப்படுத்தினார், பாரதிராஜா” – தன் பெயர்க் காரணத்தோடு உரையாடலைத் தொடங்குகிறார், ‘கடலோரக் கவிதைகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ராஜா. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். வசதியான குடும்பத்தில் பிறந்ததால சின்ன வயசுலே இருந்து கஷ்டத்தை அவ்வளவாகப் பார்த்தது இல்லை. அப்பா பிசினஸ் பண்னார்.

அம்மா ஹவுஸ் ஒஃயிப். சென்னை நியூ காலேஜ்ல படிச்சேன். சீனியர் நடிகர் சுரேஷ் என் காலேஜ் மேட். ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது சினிமாவுல நடிக்க வரணும்னு ஆசைப்பட்டதே இல்லை. சினிமாவும், நானும் எப்போதும் ரொம்ப தூரமாதான் இருந்தோம். என் சொந்தக்காரங்க பல பேர் சினிமாவுல இருந்தாங்க. தெலுங்கு நடிகர் வெங்கடேஷோட அப்பா ராமநாயுடு, என் சொந்த சித்தப்பா. தெலுங்கில் நிறைய படங்களைத் தயாரித்திருக்கிறார். அவர்தான் என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தார்னு சொல்லலாம். ஏன்னா, ‘நீ பார்க்க அழகாக இருக்கடா… படத்துல நடி’னு சொன்னது அவர்தான். அப்போ நான் காலேஜ் படிச்சுக்கிட்டு இருந்தேன்.

அப்போவே என்னை ஸ்டண்ட், டான்ஸ் கிளாஸ்னு எல்லாத்துலேயும் சேர்த்து விட்டார், சித்தப்பா. நானும் படிச்சுக்கிட்டே இதையெல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தேன். சித்தாப்பா என்னை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தணும்னு ஆசைப்பட்டார். நானும் தெலுங்கு படம்தான், என் முதல் படமா இருக்கும்னு நினைச்சேன். அந்த நேரத்தில் என் உறவினர் வேணு தயாரிப்பில் பாரதிராஜா சார் படம் இயக்குவதாக இருந்தது. -விளம்பரம்- அந்தப் படத்துக்கான கதை விவாதம் போய்க்கிட்டு இருந்த சமயத்துலதான், பாரதிராஜா சார், ‘என் படத்துக்குப் புதுமுக ஹீரோ வேணும்’னு கேட்டிக்கிட்டு இருந்தார். வேணு என்னை பாரதிராஜா சார்கிட்ட அறிமுகப்படுத்தினார்.

வித்தியாசமான கதைனும் சொல்றாங்க. என் மனசுக்கு அது வித்தியாசமான ரோலா படமாட்டேங்குது. வரும்போது வரட்டும்னு காத்திருக்கேன். ஏன்னா, மார்பிள் பிசினஸ்ல நான் பிஸி. எந்தக் குறையும் இல்லாத அந்த பிசினஸ் நல்லாப் போகுது!” என்கிறார், ராஜா.