இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் பிரபல அஜித் பட நடிகை யாரென்று தெரிகிறதா?

இந்திய அளவில் தல என செல்லமாக அழைக்கப்படுபவர்கள் இரு பிரபலங்கள் தான் ஒன்று நம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி என்றால் மற்றொருவர் தென்னிந்திய சினிமாவின் ஆசை நாயகன் அஜித்குமார்.தனது அழகான தோற்றத்தாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.இவர் நடிப்பைத்தாண்டி இயல்பு வாழ்க்கையில் அவரது நல்ல குணதிசாயங்களுக்காகவே இன்றளவும் மக்கள் மத்தியில் புகழின் உச்சியில் உள்ளார்.

தமிழில் அமராவதி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 50 க்கும் மேற்பட்ட திரைபடங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.தான் செய்யும் சிறிய உதவியானாலும் விளம்பரப்படுத்தும் இந்த காலத்தில் தல பல உதவிகளை யாருக்கும் தெரியாமல் செய்து வருகிறார். தமிழ் சினிமாவிற்கு பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் கனிகா.அதனை தொடர்ந்து இவர் தல அஜித்துடன் வரலாறு படத்தில் பெரியளவில் பிரபலமானார்.

மேலும் தமிழை விட இவர் அதிகமாக மலையாள படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருந்தார்.அதுமட்டுமின்றி தற்போது இவர் நடிப்பில் கோப்ரா, யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட முக்கிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் நடிகை கனிகா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.அந்த வகையில் தற்போது தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு மதுரை பொண்ணு என குறிப்பிட்டுள்ளார்.