முதலில் தந்தை பின்னர் மகள், மனைவி : கொரோனா நோயாளிகளுக்கு உதவிய குடும்பத்திற்கு நேர்ந்த பரிதாபம்!!

இந்திய மாநிலம் கேரளாவில் கொரோனா நோயாளிகளுக்கு உதவிய ஆட்டோ சாரதியின் குடும்பம் அடுத்தடுத்து ம.ரணங்களால் ஸ்தம்பித்துள்ளது.

கேரளாவில் ஆட்டோ சாரதியான 57 வயது அசோகன் கொரோனா நோய் பாதிப்பால் கடந்த மாதம் 30ம் திகதி ம.ரணமடைந்தார். ஆட்டோ சாரதியான அசோகன் அப்பகுதி மக்களில் பெரும்பாலானோரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் முன்னர் மருத்துவமனையில் சேர்ப்பித்தவர்.

கடைசியில் கொரோனா பாதித்து அசோகன் ம.ரணமடைந்தார். இந்த நிலையில், நேற்று அசோகனின் மனைவி 50 வயதான லில்லிக்குட்டி என்பவர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி ம.ரணமடைந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இவர்களது மகள் 28 வயதான விஜி கொரோனாவால் ம.ரணமடைந்திருந்தார். பிறந்து 18 நாட்கள் மட்டுமேயான விஜியின் பிஞ்சு கு.ழந்தை தற்போது தந்தை அபிஷேகின் பா.துகாப்பில் உள்ளது.

விஜியும் தாயார் லில்லிக்குட்டியும் தந்தை அசோகனும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சந்திக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இதனிடையே, பிறந்து 18 நாட்களேயான பிஞ்சு குழந்தை அனன்யாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,

குழந்தைகளுக்கான மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். மேலும், அசோகனின் மனைவி லில்லிக்குட்டியின் சகோதரருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

கொரோனா நோயாளிகள் என அறிந்தும் அப்பகுதி மக்களை தமது ஆட்டோவில் மருத்துவமனையில் சேர்ப்பித்த அசோகன் இறுதியில் கொரோனாவுக்கு ப.லியானது அப்பகுதி மக்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

தந்தையும் தாயாரும் சகோதரியும் கொரோனாவுக்கு பலியான நிலையில், அசோகனின் மகன் விபின் மொத்த குடும்பத்தையும் இழந்த நிலையில் உள்ளார். மட்டுமின்றி, வீடு அடமானத்தில் இருப்பதால், பெரும் நிதிச்சுமையும் விபின் மீது உள்ளது