இயக்குனர் முருகதாஸின் மகனா இது…? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் AR முருகதாஸ். இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல்வேறு படங்களை இயக்கி தனது திறமையை நிரூபித்துள்ளார் AR முருகதாஸ்.

விஜயகாந்த் நடிப்பில் இவர் இயக்கிய ரமணா திரைப்படம் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஓன்று என கூறலாம். அதேபோல துப்பாக்கி, கத்தி, கஜினி போன்ற பிரமாண்ட படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் AR முருகதாஸ். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கவுள்ளார் முருகதாஸ்.

இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படத்தின் தமிழ் படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு முருகதாசிற்கு கிடைத்தது. படம் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளிவர இருக்கும் நிலையில் படத்தின் ஆன்தம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முருகதாஸின் மகனும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் ஒரு போட்டோவிற்கு பயங்கர ஸ்டைலாக அவர் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஓன்று வெளியாகி வைரலாகிவருகிறது.