அட.. நம்ம மீரா ஜாஸ்மின்-ஆ இது…. ஆளே அடையாளம் தெரியாமல் மாறீட்டாங்க…. வியந்து பார்த்த ரசிகர்கள்… புகைப்படம் இதோ…!!!!

தமிழில் சண்டைக்கோழி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வந்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் மீரா ஜாஸ்மின். அதன் பிறகு ஆயுத எழுத்து மற்றும் ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் தனது கவர்ச்சியால் மறைக்க வைத்தவர். மலையாள திரை உலகிலும் பிரபலமானவர் இவர். பின்னர் திடீரென திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

அதன் பிறகு பல வருடங்களாக கேமராவிற்கு முன் வராத இவர் சில மாதங்களுக்கு முன்னர் நகைக்கடையில் ரசிகர்களால் புகைப்படம் எடுக்கப்பட்டார். அந்தப் புகைப்படத்தில் மிகவும் உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் மாறி இருந்தார். இதனைத் தொடர்ந்து திடீரென சமூக வலைத்தளத்திற்கு எண்ட்ரி கொடுத்த மீரா ஜாஸ்மின் தனது மொத்த உடல் எடையையும் கரைத்து ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.