மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை ஐஸ்வர்யா ராய்..? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்.. வெளியான வீடியோ(உள்ளே)..

உலக அழகியாக கடந்த 1994 ஆம் ஆண்டு தேர்வாகி பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றும் பல கோடி சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வந்தார். இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு ஆரத்யா பச்சன் என்ற மகளைப் பெற்றெடுத்த ஐஸ்வர்யா சினிமாவில் இருந்து சற்று விலகினார். சில நாட்கள் கழித்து சினிமாவில் மீண்டும் களம் இறங்கினார். தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யாராய் இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்று செய்தி வெளியாகி உள்ளது. விமான நிலையத்தில் கணவர் மற்றும் மகளுடன் சென்றபோது எடுத்த வீடியோ ஒன்றில் அவர் தனது கைகளால் வயிற்றை மறைத்தபடி சென்று உள்ளார். இதனை பார்க்கும் போது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி வருகின்றன.