“அனிருத்துக்கு சின்ன வயசுல பாடவே தெரியாது”…. இதை சொன்னது யார் தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் டாப் இசை அமைப்பாளராக வளம் வருபவர் அனிருத். நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் அறிமுகமான அனிருத் முதல் படத்திலேயே உலக அளவில் பிரபலமானார். அனிருத் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார். அவர் இசையமைக்கும் பாடல்கள் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் அனிருத் பல பாடல்களை பாடி இருக்கிறார்.

அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அனிருத்தின் தந்தையும் நடிகருமான ரவிச்சந்திரன் தனது மகனைப் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அதில், அனிருத்துக்கு சிறுவயதில் பாடவே தெரியாது, ஆனால் இன்று பல பாடல்களை மிகச் சிறப்பாக பாடி வருகிறார்.

அவர் பாடிய அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனைப் பார்க்கும்போது ஒரு தந்தையாக மட்டுமல்லாமல் ஒரு ரசிகனாகவும் அவரை பார்த்து பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார். தற்போது அனிருத் ஒரே சமயத்தில் ரஜினி, கமல், அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் படங்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.