“மரணத்திலிருந்து தப்பித்தேன்”…. யாராவது எனக்கு உதவுங்க…. விஷால் பட நடிகை கதறல்….!!!!

தமிழ் சினிமாவில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற திரைப்படத்தில் விஷாலுடன் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தனுஸ்ரீ தத்தா. தற்போது இவர் பாலிவுட்டில் கலக்கி வருகிறார். இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில், நான் மிகவும் துன்புறுத்தப்பட்டு மோசமாக குறி வைக்கப்படுகிறேன், தயவு செய்து யாராவது ஏதாவது செய்யுங்கள் என்று குறிப்பிட்டு ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

இது தற்போது திரையுலகில் பரபரப்பு கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதலில் எனது பாலிவுட் பணிகள் கடந்த ஒரு வருடத்தில் நாசமாகப்பட்டது. அதன் பிறகு எனது வீட்டின் பணிப்பெண்ணின் மூலம் குடிநீரின் மருந்துகள் மற்றும் ஸ்டெராய்டுகள் கலக்க செய்தனர். இதனால் உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதன் பிறகு நான் உஜ்ஜயனுக்கு தப்பிச் சென்றேன். அப்போது எனது வாகனத்தின் பிரேக் இரண்டு முறை சேதமடைந்து விபத்துக்குள்ளானது.

அந்த மரணத்திலிருந்து நான் தப்பித்து 40 நாட்களுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கை மற்றும் எனது பணிகளை தொடர மும்பை திரும்பினேன். தற்போது எனது குடியிருப்புக்கு வெளியே அருவருப்பான விஷயங்கள் நடக்கின்றன. அனைவரும் காது கொடுத்து கேளுங்கள் நான் நிச்சயமாக தற்கொலை செய்து கொள்ளப் போவதில்லை. நான் எங்கும் வெளியேறப் போவதில்லை.நான் இங்கு தான் தங்கி எனது பொது வாழ்க்கையை முன்பை விட உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.