12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு… ராணுவ பள்ளியில் மாதம் ரூ.81,100 சம்பளத்தில் வேலை…..!!!!!

இந்திய ராணுவ காலாட்படை பள்ளி ஆனது அவ்வப்போது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது Stenographer Grade II, Lower Division Clerk, மற்றும் பல பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Stenographer Grade II, Lower Division Clerk மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 65 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:  12ம் வகுப்பு அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 18- 27

சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000 முதல் ரூ.81,000 வரை ஊதியம் வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://drive.google.com/file/d/1X5IEcsdGaB0jeGd0jGx5hcAH1aOw1jdu/view