மகன் சிம்புவின் திருமணம் எப்போது?….. சென்னை திரும்பிய டி.ஆர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நடிகராக வலம் வருபவர் டி ராஜேந்தர். இவருக்கு கடந்த மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதாக கூறினர். இதனால் அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

அதற்கான ஏற்பாடுகளை அவரது மகன் சிம்பு செய்தார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க சென்ற டி ராஜேந்தருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக ஓய்வெடுத்தார். தற்போது பூரண குணமடைந்த இவர் இன்று குடும்பத்தினருடன் சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.ஆர், நான் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி என தெரிவித்தார்.

அமெரிக்காவில் என்னை கவனித்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி. அதிலும் குறிப்பாக அமெரிக்க தமிழ் சங்க நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி. பழைய தெம்போடு என்னுடைய தாய் மண்ணுக்கு வந்துள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று கூறினார். பின்னர் சிம்புவின் திருமணம் குறித்து பேசி அவர், திருமணம் என்பது கடவுள் தீர்மானிப்பது. இருமனம் சேர்ந்தால் தான் திருமணம். எங்கள் வீட்டிற்கு நல்ல குணமுடைய திருமகள் மருமகளாக வருவாள் என்று கூறினார்.