அதிரடி வசூல் வேட்டையில் பார்த்திபனின் இரவின் நிழல்- இதுவரை மட்டுமே இவ்வளவு வசூலா..?

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் மற்றும் இயக்குனராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் பார்த்திபன் அவர்கள். அப்போது முதலே வித்தியாசமான படங்களை எடுக்க வேண்டும் என்று எண்ணக்கூடிய ஒரு இயக்குனர் மற்றும் நடிகர் இவர், அதற்க்கு எடுத்துக்காட்டு இவரின் “ஒத்தசெருப்பு” திரைப்படம். என்று தான் சொல்ல வேண்டும். மேலும், மற்ற படங்களில் தொடர்ந்து நடிக்கும் பார்த்திபன் படங்கள் இயக்கும் வேலைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் அவரே கதை எழுதி, இயக்கி, நடித்துள்ள திரைப்படம் “இரவின் நிழல்”. நல்ல விமர்சனங்கள் வந்தாலும் சில பிரச்சனைகள் எழுந்த வண்ணம் உள்ளன. பார்த்திபனும் சர்ச்சை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த வண்ணம் உள்ளார்.

இந்த திரைப்படம் சுமார் 20 கோடி பட்ஜெட்டில் தயாராகி கடந்த ஜுலை 15ம் தேதி திரை அரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் நடத்தி வருகிறது, என்று சொல்லலாம். படம் ரூ. 5 கோடிக்கு மேல் வசூல் செய்துளளதாக கூறப்படுகிறது.