சிறுவயதில் பிரபல நடிகருடன் விஜய் -சூர்யா எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படம்…. இணையத்தில் வைரல்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா. இவர்களுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. அதனைப் போலவே சூர்யாவின் நடிப்பில்  வணங்கான் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து முதல் முறையாக நடித்த திரைப்படம் நேருக்கு நேர். அந்தத் திரைப்படம் தான் சூர்யாவின் அறிமுக திரைப்படம். அந்த படத்திற்கு பின்னர் இருவரும் இணைந்து ஃபிரண்ட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தனர்.அவர்களின் கூட்டணி அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு ஒன்றாக இணைந்து நடிக்காமல் இருக்கும் இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என தகவல் வெளியாகி கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரும் ஒன்றிணைந்து சூர்யாவின் தந்தையும் மூத்த நடிகருமான சிவகுமாருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.