‘கலக்காத்த சந்தனமரம் வெகுவோக’…. சிறந்த பாடகருக்கான தேசிய விருதை தட்டி தூக்கிய நஞ்சம்மா பாட்டி…

கேரளாவின் அட்டப்பாடியின் ஒரு சிறிய மலை கிராமத்தில் வசித்து வரும் இருளர் சமூகத்து பெண்ணான பாடகி நஞ்சமாவுக்கு தேசிய விருது அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாட்டின் 68 வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த பாடகருக்கான விருதை நஞ்சமா பாட்டி பெற்றுள்ளார். மறைந்த இயக்குனர் சச்சிய இயக்கத்தில் உருவான ஐயப்பனும் கோஷியும் என்ற திரைப்படத்தில் தனது உயிரோடு இளைந்த குரலில் நஞ்சம்மா பாடிய “கலக்காத்தா சந்தன மேரா “என்ற பாடலுக்கு அவருக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

தமது இருளர் மொழியிலேயே நஞ்சமா அந்த பாடலை எழுதி பாடியுள்ளார். அத்தகைய குரலை அங்கீகரிப்பது தேசிய விருதுக்கு கிடைத்த பெருமை என்றால் அது மிகையல்ல. இதை எடுத்து நஞ்சம்மா பாட்டிக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.