இந்திய அளவில் No:1 …. பாலிவுட்டை சுக்குநூறாக உடைத்த நடிகை சமந்தா…. ஆர்மேக்ஸ் வெளியிட்ட பட்டியல்….!!!!

இந்தியாவில் பான் இந்தியா என்ற வார்த்தை தற்போது பல மொழி சினிமாக்களிலும் பிரபலமாகிவிட்டது. இந்த மாபெரும் புகழ் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் என அனைவருக்கும் ஒரு அங்கீகாரத்தை தருகிறது. அவ்வகையில் தென்னிந்தியாவிலிருந்து பலரும் பிரபலமாகி வருகின்றன. ஆர்மேக்ஸ் மீடியோ சமீபத்தில் ஒரு சர்வே எடுத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள நடிகர்கள் இதற்காக கணக்கில் எடுக்கப்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில் டாப் 10 நடிகைகள் பட்டியலில் தென்னிந்திய நடிகைகள் ஏழு பேர் மற்றும் பாலிவுட் நடிகைகள் 3 பேர் இடம் பிடித்தனர். தற்போது வெளியாகி உள்ள பட்டியலில் டாப் 10 நடிகைகள் பட்டியலில் சமந்தா முதல் இடத்தை பெற்றுள்ளார்.

இரண்டாவது இடத்தில் ஆலியா பட், மூன்றாவது இடத்தில் நயன்தாரா, நான்காவதாக காஜல் அகர்வால், ஐந்தாவது இடத்தில் தீபிகா படுகோனே, ஆறாவது இடத்தில் ராஷ்மிகா மந்தனா, 7வது இடத்தில் அனுஷ்கா, எட்டாவது இடத்தில் கத்ரீனா கைஃப், 9வது இடத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பத்தாவது இடத்தில் பூஜா கிட்டே ஆகியோர் உள்ளனர். இதன் மூலம் பாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டி முதல் இடத்தை பிடித்துள்ளார் சமந்தா.