10 % கூட சந்தோஷம், நிம்மதியை பார்த்தது இல்லை…. நான் இன்னும் நடிகனாகவே இருக்கிறேன் ….. ரஜினிகாந்த் பேச்சு…..!!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று கலந்து கொண்டார். அப்போது தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை. எத்தனையோ படங்கள் நடித்து இருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ராகவேந்திரா மற்றும் பாபா படங்கள் தான்.

இந்த இரு படங்கள் வந்த பிறகு தான் அனைவருக்கும் இவர்கள் இருவரையும் தெரிய வந்தது. எனக்கு மிகவும் சந்தோசமாக விஷயம், என் ரசிகர்கள் இருவரும் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் நான் இன்னும் நடிகராகவே இருக்கிறேன். வாழ்க்கையில் பணம், பேர், புகழ் எல்லாவற்றையும் கடந்து நிம்மதியாக இருக்க வேண்டும்.எனது வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டு விட்டேன்.ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி மற்றும் சந்தோசம் பத்து சதவீதம் கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.