800 படத்திற்கு No சொன்ன விஜய் சேதுபதி…. நாயகனாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரர்…. மாஸ் அப்டேட்….!!!!

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமாக உள்ளது. இதற்கு முன்னதாக முத்தையா முரளிதரன் ரோலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தார். அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்பட்டது குறித்து எதிர்ப்பு கிளம்பியதால் விஜய் சேதுபதி முரளிதரன் ரோலில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து படம் சில ஆண்டுகளாக எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இதற்கு முன்னதாக 800 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் விஜய் சேதுபதி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த ஸ்பின்னரை சித்தரிக்கும் வகையில் மேக்கப் செய்யப்பட்டிருந்தார்.

அதன் பிறகு அதிலிருந்து விலகினார். இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தன் வாழ்வில் பட்ட இன்னல்களையும் அதன் மூலம் பெற்ற வெற்றிகளும் குறித்தான 800 என்ற திரைப்படத்தில் அவரே நாயகனாக நடிக்க உள்ளதாக சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் எம் எஸ் ஸ்ரீபதி என்பவர் இயக்கத்தில் உருவாக உள்ளது.