“முட்ட பாயும் காளை.. எகிறி ஓடும் சூர்யா”…. வேற லெவல் வீடியோ வெளியீடு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில் சூர்யாவின் பிறந்த நாளான நேற்று அந்த வீடியோ வெளியிடப்பட்டது. அதில் சூர்யா வாடிவாசல் திரைப்படத்திற்காக மாடுபிடி வீரர்களிடம் எடுத்த பயிற்சிகளின் தொகுப்பாக இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

தனது உயிரை பணயம் வைத்து சூர்யா எடுத்து அந்த பயிற்சி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாடுபிடி வீரராக களம் இறங்கும் சூர்யா சீறிவரும் காளை அடக்குவதற்கு தயாராக இருக்கும்போது காலை வேகமாக ஓடிவரும். அந்தக் காட்சி பார்ப்பதற்கே முயற்சியாக உள்ளது. அதிலும் ஒரு காட்சியில் சூர்யாவை கிட்டத்தட்ட முட்டும் அளவுக்கு நெருங்கி வருகிறது அந்த காளை.

சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக வெளியாகி இருக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் கலக்கி வருகிறது. இந்தத் திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் சூர்யாவுக்கு இது சரியான பிறந்தநாள் பரிசு என்றும் அடுத்த தேசிய விருதுக்கு அவர் தயாராகி விட்டார் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.