Dance Practice செய்த முதல்வர் ஸ்டாலின்…. கற்று கொடுத்தது யார் தெரியுமா?…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ இதோ….!!!!

தமிழகத்தில் முதல் முறையாக செஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்காக இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் செஸ் ஆனந்தம் பாடல் ஒன்று வெளியாகியது. அந்தப் பாடலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பாடலின் தோன்று காட்சியை நடன இயக்குனர் விருந்தா சொல்லிக் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுக்கும் டான்ஸ் ஸ்டெப்புகளை அவர் சொல்லிக் கொடுத்தார்.

இந்த படப்பிடிப்பில் முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் கலந்து கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என விருந்தா அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த பாடலை இயக்கியுள்ள நிலையில் ஏ ஆர் ரகுமான் மற்றும் முதல்வர் ஸ்டாலின் அந்த பாடலில் நடனம் ஆடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.