அம்மாவுக்கு பிறந்தநாள்…. க்யூட் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த அனுஷ்கா…. வைரல் புகைப்படம் இதோ….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் திரைத்துறையில் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனுஷ்கா செட்டி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

அது மட்டுமல்லாமல் விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். பல படங்களுக்காக உடல் எடையை கூட்டியும், உடல் எடையை குறைத்தும் தனது நடிப்பில் அசத்தியவர். ஆனால் சமீபத்தில் உடல் எடையை அதிகரித்ததன் காரணமாக திரைப்பட வாய்ப்புகள் அவ்வளவு அதிகமாக எதுவும் கிடைக்கவில்லை.

இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அனுஷ்கா தனது அம்மா மற்றும் அப்பாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் அம்மாவிற்கு பிறந்தநாள் என்பதால் தனது வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.