சாலையோரம் மீன்கடையில்…. கடைக்காரரை பாடாய்படுத்திய நித்யா மேனன்….. என்ன பேசுனாங்கனு நீங்களே பாருங்க…..!!!!!

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நித்தியா மேனன். நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவர் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு நித்யா மேனன் வீல்சேரில் வந்தார். அவர் சமீபத்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பு முறிந்த காரணத்தால் இசை வெளியீட்டு விழாவிற்கு வீல்சேரில் வந்திருந்தார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர்.

இந்நிலையில் அவர் சாலையோரம் இருக்கும் மீன் கடை ஒன்றில் கடைக்காரரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு வேடிக்கையாக பேசும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.