“ஆத்தா மீனாட்சி தாயே”…. மதுரை மீனாட்சி கோவிலில் நடிகர் கார்த்தி…. எதற்காக சென்றார் தெரியுமா?….!!!

தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான திரைப்படம் கொம்பன். கிராமத்துக் கதையை மையப்படுத்திய அந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் நடித்திருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது தற்போது ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் முத்தையா மற்றும் கார்த்திக் கூட்டணி இணைந்துள்ளது.

அதன்படி கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை மதுரையில் நடைபெறுகிறது. சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன் முதலாக ஹீரோயினியாக களமிறங்குகிறார். அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், கருணாஸ், ராஜ்கிரன் உள்ளிட்டோர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த விழாவில் சூர்யா, கார்த்தி மற்றும் அதிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக வருகை தந்த சூர்யாவை பார்த்த ரசிகர்கள் பலரும் ரோலக்ஸ் என்று ஆரவாரம் செய்தனர். இந்நிலையில் மதுரைக்குச் சென்ற கார்த்தி இன்று அதிகாலை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அவர், “ஆத்தா மீனாட்சி தாயே, எங்கள் படம் எல்லா சென்டரிலும் வெற்றி பெற வேண்டும்”என்று அவர் பிரார்த்தனை செய்துள்ளார். அவர் கோவிலுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.