முத்தழகு சீரியல் நடிகையின் நிஜ கணவர் இவரா?…. திருமணத்திற்கு பிறகு வெளியான புகைப்படம் இதோ….!!!!

விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் முத்தழகு. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலியாக நடித்துக் கொண்டிருப்பவர் தான் வைஷாலி தணிகா. இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான கதகளி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்திருப்பார். குறிப்பாக மாலை நேரம் என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை மற்றும் ராஜா ராணி சீரியல்களில் நடித்ததன் மூலம் இவர் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை மற்றும் மகராசி உள்ளிட்ட சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் தேவ் என்பவரை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.

திருமணத்திற்கு பின்னர் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் கலக்கி வரும் வைஷாலி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் அவரின் கணவர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.