அரண்மனை போல பிரம்மாண்டமான வீடு…. நடிகை ரோஜாவின் அழகிய வீட்டுத்தோட்டம்…. எப்படி இருக்குன்னு பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் 80-90 களில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுத்தன. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன் பிறகு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் ஆர் எஸ் கட்சியில் இணைந்தார். அங்கு ரோஜாவுக்கு விளையாட்டு மட்டும் மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஒரு பக்கம் நடிகையாகவும் மறுபக்கம் அரசியல் பிரபலமாகவும் விளங்கி வருகிறார்.

ஆந்திராவில் ரோஜா நகரி பகுதி அமைச்சராக இருப்பதால் அங்கேயே இருந்து மக்களின் கோரிக்கையை கேட்க வேண்டும் என்பதற்காக அங்கே புதிய வீடொன்று கட்டி உள்ளார். இந்நிலையில் நடிகை ரோஜா பிரம்மாண்டமான தன் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் ஏராளமான செடிகளை வளர்த்து வருகிறார். தனது வீட்டின் மாடித்தோட்டம் குறித்து ரோஜா பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாய் பரவி வருகிறது.