இந்த வயசுல, இப்படி ஒரு காட்சியா?….. 52 வயசுல பிரபல நடிகருடன் 90ஸ் நடிகை…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கடந்த 1991 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் நடித்த சின்ன கவுண்டர், கருப்பு வெள்ளை, வண்டிச்சோலை சின்ராசு, இந்தியன் மற்றும் சேனாதிபதி உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்தன. அதிலும் குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இந்தியன் என்ற திரைப்படத்தில் வயதான கதாபாத்திரத்தில் சுகன்யா நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் ஒரே ஆண்டில் விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகு சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகின்றார். இந்நிலையில் 52 வயதாகும் இவர் நவரச நாயகன் கார்த்திக்குடன் முதலிரவு காட்சியில் அடிப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த காட்சி எந்த படத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வயசுல இப்படி ஒரு காட்சியாய் என்று அதிர்ச்சி அடைந்து கமாண்ட் செய்து வருகிறார்கள்.