லண்டனில் சைக்கிளிங் ரேஸ்…. டீமுடன் தயாரான பிரபல நடிகர்…. சூர்யாவுக்கு நன்றி கூறி twitter பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. அவர் இறுதியாக நடித்த திரைப்படம் டெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக நடிகர் ஆர்யா மற்றும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில் கேப்டன் திரைப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் போஸ்டரில் விசித்திரமான கொடூர விலங்கு இடம்பெற்று இருப்பதால் சயின்ஸ் பிக்சன் திரில்லர் படமாக வெளியாகும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இந்தத் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வருகின்ற செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட உள்ளது.

நடிகர் ஆர்யா  நடிப்பு மட்டுமல்லாமல் உடற்பயிற்சி மற்றும் சைக்கிளிங் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் எப்போதும் சைக்கிளிங் செய்து கொண்டிருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்வது வழக்கம். இவர் வர் ராண்டன்னியூரிங் என்ற நீண்ட தூர சைக்கிள் ஓடுதல் விளையாட்டிலும் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் இவர் லண்டனில் நடைபெற உள்ள சைக்கிளிங் போட்டியில் தனது குழுவினருடன் கலந்து கொள்ள உள்ளார். இந்தப் போட்டி இந்த மாதம் தொடங்க உள்ளது. இதனிடையே ஆர்யா சைக்கிளிங் அணியின் ஜெர்சியை நடிகர் சூர்யா இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதற்காக நன்றி தெரிவித்த ஆர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் சூர்யாவிற்கு நன்றி தெரிவிக்கும் இடமாக அந்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.