First ஆள விடுங்க, நான் கெளம்புறேன்…. இனியும் உங்ககிட்ட அசிங்கப்பட மாட்டேன்…. விஜய் டிவியை டாட்டா காட்டிய பிரபல தொகுப்பாளினி…. !!!!

சின்னத்திரையில் நீண்ட காலமாக இருக்கும் தொகுப்பாளனி அர்ச்சனாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளன. முதலில் சன் டிவியில் இளமை புதுமை மற்றும் காமெடி டைம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் மாம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை நீண்ட காலமாக தொகுத்து வழங்கினார்.

அதன் பிறகு இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு தேடி வர, அந்நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த இவருக்கு விஜய் டிவியில் தொகுப்பாளனி வாய்ப்புகள் குவிந்தன. அவ்வகையில் விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் தனது மகளுடன் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் டிவியில் இருந்து மீண்டும் ஜீ தமிழ் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளனியாக இருந்த பிரியங்கா மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க இருப்பதால் அர்ச்சனாவிற்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் தன்னை அதிக அளவு கிண்டல் செய்து அவமானப்படுத்துவதால் விஜய் டிவியில் இருந்து விலகி மீண்டும் ஜீ தமிழ் செல்ல உள்ளதாக வெளியாகி உள்ளது.