அடக்கடவுளே.. இப்படியா?….. ராம்ப் வாக் செய்த நடிகை யாஷிகா…. போலீசாருக்கு நேர்ந்த கதி…..!!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் நிறுவனம் சார்பாக அழகுப் போட்டி ஒன்று முதன் முதலாக நடத்தப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகை யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டார். தமிழ் சினிமாவில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் அவ்வபோது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முதலாக நடைபெற்ற பேஷன் ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் அங்கிருந்த போட்டியாளர்களோடு ராம்ப் வாக் செய்தார். அதனைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் விதவிதமான ஆடைகளை அணிந்தபடி சிறுவர் சிறுமிகள், பெண்கள் என அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியின் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது அங்கிருந்த பார்வையாளர்கள் போலீசாரை மேடைக்கு வருமாறு வற்புறுத்தியதால், பணியில் இருந்த 4ஆண் காவலர்கள் மற்றும் மூன்று பெண் போலீசார் மேடையில் ஏறி ராம்ப் வாக் செய்தனர்.

அப்போது நடிகர் சூர்யா நடித்த சிங்கம் படத்தின் பின்னணி இசை போட போலீசார் ஒருவர் பின் ஒருவராக மேடையில் நடந்து பார்வையாளர்களை வியக்க வைத்தனர். அந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் போலீசார் உடையில் இந்த மாதிரி செய்யலாமா என்று பலரும் சரமாரியான கேள்விகளை எழுப்பிய நிலையில், அங்கு பணிபுரிந்த மூன்று பெண் போலீஸ் மற்றும் நான்கு ஆண் போலீசாரை வெவ்வேறு பிரிவுகளில் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.