ரஜினியின் காலா திரைப்படம்…. நிறுவனத்தை இழுத்து மூடிய நடிகர் தனுஷ்…. இதன் பின்னணி என்ன?….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இறுதியாக நடித்த மாறன் திரைப்படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கு தனுஷ் கமிட் ஆகி உள்ளார். அதன்படி ஹாலிவுட் இயக்குனர் ரூஸ்சோ பிரதர்ஸ் இயக்கிய தி கிரே மேன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த 20 வருடங்களாக தனது கடின உழைப்பால் ஆக சிறந்த நடிகராக உயர்ந்திருக்கும் தனுஷ் பாடகர், பாடலாசிரியர்,இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

இதனிடையே நடிகர் தனுஷ் Wunderbar Films என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தி வந்துள்ளார். ஆனால் அந்த நிறுவனம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்திற்கு பிறகு எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. அதாவது ரஜினி நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் நான் நிறுவனத்தை மூடியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த நிறுவனம் தயாரிப்பில் இறங்கியுள்ளது. அதன்படி எலர் மற்றும் மாரி செல்வராஜ்,வெற்றிமாறன் உள்ளிட்ட இயக்குனர்கள் இருக்கும் திரைப்படங்களை தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது.