பிக் பாஸ் பிரபலம் அமீர் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் , உண்மையை போட்டு உடைத்த பாவனி , காணொளி உள்ளே ..

பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் இன் மூலம் அறிமுகமானவர் பாவனி. பின்பு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் வைல் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்தவர் அமீர்.

அதன் பிறகு அவர் பாவனியிடம் நெருக்கமாக பழகியதால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பலரும் கூறி வந்தனர்.பிக் பாஸ் முடிந்த பிறகும் கூட இருவரும் வெளியிடங்களில் ஒன்றாக தான் சுற்றி வருகிறார்கள். அண்மையில் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார்கள். பல்வேறு வேடங்களில் அந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அசத்தி வருகின்றனர்.

அதன்படி அமீர் மற்றும் பாவணி இருவரும் பல்வேறு வேடங்கள் அணிந்து இதுவரை நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர் என்று தான் சொல்லவேண்டும் சமீபத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து ரசிகர்களிடம் பேச நேரலையில் வந்துள்ளனர் அப்பொழுது உண்மையை சட்டென்று போட்டு உடைத்துள்ளார் , இதனால் இவர்களது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர் ..