“புது தருணத்திற்குள் நுழைய போகிறோம்”… சந்தோசத்தில் பிரபல நடிகர்… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்…

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ,ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அர்ஜுன். இவர் அதிகமான சண்டை காட்சி திரைப்படங்களில் இவரை ‘ஆக்ஷன் கிங்’ என்று ரசிகர்கள் அழைக்கின்றனர்.

முதல்வன், ஜென்டில்மேன், ஜெய் ஹிந்த், மருதமலை ஏழுமலை,வேட்டையாடு விளையாடு போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் அர்ஜுனின் சகோதரியின் மகன் துருவா சர்ஜா. துருவா சர்ஜா ப்ரேரனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

துருவாவின் அண்ணனும் ,மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜா திருமணமான அடுத்த ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவியான மேக்னாராஜ் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். துருவா சர்ஜா நிறை மாத கர்ப்பிணியான தனது மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு நாளாக இந்த விஷயத்தை கூறாமல் இருந்து விட்டீர்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் துருவா சர்ஜா குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். ஜூனியர் துருவா இந்த மாதம் பிறக்க இருக்கிறாராம் .