அடி தூள்…. மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் ரசிகர்களின் சூப்பர் ஹீரோ…. அதுவும் எப்படிப்பட்ட கதையில் தெரியுமா….????

தமிழ் சினிமாவில் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்து இருக்கும் நடிகர் தான் ராமராஜன். கரகாட்டக்காரன் திரைப்படம் தற்போதும் டிவியில் ஒளிபரப்பாகினால் அதனை பார்ப்பவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். நடிகர் ராமராஜன், கனகா, கவுண்டமணி மற்றும் செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கரகாட்டக்காரன்.

இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்கில் ஓடி பல சாதனைகளை படைத்தது. இப்படம் வந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் வசூலை குவித்தது. ராமராஜன் ஹீரோவாக மட்டுமல்லாமல் பல படங்களையும் இயக்கியுள்ளார்.மதுரை வேலூரில் இருந்து சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த இவர் நாராயணசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து மண்ணுக்கேத்த பொண்ணு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்த நிலையில் அவர் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கினார். பிறகு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.அந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதால் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக பலம் வந்தார். இவர் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.

இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கும் ராமராஜன் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் பல வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நடிகர் ராமராஜன் தற்போது மீண்டும் திரையுலகில் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.

அதாவது தம்பிக்கோட்டை படத்தை இயக்கிய அம்மு ரமேஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரில்லர் கதைகளும் கொண்ட படத்தில் ராமராஜன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.