லண்டனில் மிகப்பெரிய சொந்த வீடு…. திடீரென கடுப்பாகி குஷ்பு போட்ட பதிவு…. ரசிகர்கள் ஷாக்…..!!!!

தமிழ் சினிமாவில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் குஷ்பூ. இவரின் படங்கள் அனைத்துமே எப்போதும் ஹிட் கொடுக்கும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு தற்போது இருபது வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் அரசியலில் களமிறங்கினார் குஷ்பு. பின்னர் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இதனிடையே  நடிகை குஷ்பூ தனது உடம்பை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

சமீபத்தில் லண்டனுக்கு சென்றுள்ள குஷ்பூ அங்கு மாடர்ன் உடையில் கடைகளுக்கு சென்ற போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது குஷ்பூ தனது ட்விட்டரில் புது வீட்டில் காபி குடிப்பதாக குறிப்பிட்டு இரண்டு போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

அதனால் அவர் லண்டனில் சொந்த வீடு வாங்கி விட்டார் என்று இணையத்தில் செய்தி பரவியது. அதனைப் பார்த்து கோபமாக விளக்கம் அளித்திருக்கும் குஷ்பூ, வீட்டை வாடகைக்கும் எடுக்கலாம் என யாரும் கேள்விப்பட்டதே இல்லையா என தெரிவித்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.