எங்கள யாராவது அசிங்கமாக பேசினா அவ்வளவுதான்…. இது எங்க லைப்…. செம கடுப்பான ரவீந்தர்….!!!!

சீரியல் நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரைஅண்மையில்  திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தில் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றும் தொலைக்காட்சி துறை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து தனது திருமண புகைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், எல்லோரும் மகாலட்சுமிபோல பெண் அமைய வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் எனக்கு மகாலட்சுமியே வாழ்க்கைத் துணையாக அமைந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என அவர்களை வெளிப்படையாக கூறியுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென இவர்களை திருமண கோலத்தில் பார்த்து அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர். இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தாலும் மறுபக்கம் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இவர்களின் திருமணம் குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில் அவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக ரவீந்தர் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் தன்னையும் தனது மனைவியையும் யாரும் அசிங்கமாக பேச வேண்டாம் என்றும் அவர்கள் முன் தாங்கள் நன்றாக வாழ்ந்து காட்டுவோம் என பதிவிட்டுள்ள நிலையில், ஒருவர் இவரைப் பற்றி விமர்சித்துள்ளதால்  அவருக்கு பதிலடி கொடுத்து தயாரிப்பாளர் ரவிந்தர் ஒரு பதிவை போட்டு உள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.