அடடே இப்படி ஒரு வாய்ப்பா?…. அமீர் – பாவணிக்கு அடித்த அடுத்த ஜாக்பாட்…. செம குஷியில் அவர்களே சொன்ன குட் நியூஸ்….!!!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் இன் மூலம் அறிமுகமானவர் பாவனி.  பின்பு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் வைல் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்தவர் அமீர். அதன் பிறகு அவர் பாவனியிடம் நெருக்கமாக பழகியதால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பலரும் கூறி வந்தனர். பிக் பாஸ் முடிந்த பிறகும் கூட இருவரும் வெளியிடங்களில் ஒன்றாக தான் சுற்றி வருகிறார்கள்.

அண்மையில் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு அசத்தினர்.அதில் பல்வேறு வேடங்களை அணிந்து நடனமாடி வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் காதல் ப்ரபோஸ் செய்வது மற்றும் அதையும் தாண்டி திருமணம் செய்து கொள்வது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.

விஜய் டிவியில் தற்போது காதல் புறாக்களாக பலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.முதலில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்து நடனமாட வாய்ப்பு வந்ததும் பாவனி வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் விஜய் டிவி கட்டாயப்படுத்தி அவர்களை ஜோடி சேர்ந்து ஆட வைத்துள்ளது.

இந்த செய்தியை நேற்று நடந்து முடிந்த கிராண்ட் பைனல் நிகழ்ச்சியில் பாவனை வெளிப்படையாக கூறியிருந்தார் .மேலும் அமீர் பாவணி ஜோடி நேற்று ஒளிபரப்பான பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஒரு மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் அறிவித்தனர்.

அதாவது இருவரும் சேர்ந்து ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறினர்.இந்த விஷயத்தை மிக மகிழ்ச்சியாக அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.