சீரியல் நடிகை மஹாலட்சுமி திருமணம்…. 20 வயது வித்தியாசமா?…. உண்மையை போட்டுடைத்த ரவீந்தர்….!!!!

சீரியல் நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி  திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தில் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றும் தொலைக்காட்சி துறை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து தனது திருமண புகைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், எல்லோரும் மகாலட்சுமிபோல பெண் அமைய வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் எனக்கு மகாலட்சுமியே வாழ்க்கைத் துணையாக அமைந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என அவர்களை வெளிப்படையாக கூறியுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென இவர்களை திருமண கோலத்தில் பார்த்து அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர்.

இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தாலும் மறுபக்கம் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது. அதன்படி மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தருக்கு 20 வயது வித்தியாசம் என பலரும் விமர்சித்து வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் தனியாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தனர்.

அந்த பேட்டியில், தங்களது திருமணம் காதல் திருமணம் தான் என்றும் இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் தனக்கு 52 வயது ஆகிவிட்டதாகவும் நான் ஏதோ மகாலட்சுமியை கடத்தி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாக பலரும் விமர்சித்து வந்தனர். ஆனால் உண்மையிலேயே எனக்கு 38 வயது தான் ஆகிறது. எங்கள் இருவருக்கும் அவ்வளவு வயது வித்தியாசம் கிடையாது என சர்ச்சைகளுக்கு ரவிந்தர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.