அடடே சூப்பர்…. பிக்பாஸ் வீட்டில் மாஸ் எண்ட்ரி கொடுத்த….. விஜயின் பிரெண்ட்ஸ் பட நடிகை…. செம குஷியில் ரசிகர்கள்….

டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். அவ்வளவு விறுவிறுப்பான நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் சர்ச்சையில் சிக்குவதை ரசிப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் உள்ளது என்றால் மறுபக்கம் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்கு ஒரு பெரிய பட்டாளமும் உள்ளது.

தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் சீசன் ஆறு ஆரம்பமாக உள்ளது. இந்நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். பிக்பாஸ் சீசன் 6 இல் பொதுமக்களும் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆடிஷன் தற்போது நடைபெற உள்ளது

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் ஒளிபரப்பாகி வருகின்றது.அவ்வகையில்  தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை  நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில்  தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 6 நேற்று தொடங்கியுள்ளது.

அதில் விஜய்யின் ஃபிரண்ட்ஸ் பட நடிகை அபிநயா ஸ்ரீ போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படத்தில் தேவயானிக்கு தங்கை ரோலில் நடித்தவர் தான் நடிகை அபிநயா ஸ்ரீ.அவர் அப்படத்தில் நடித்தது நெகட்டிவ் ரோல் என்றாலும் படத்தில் முக்கிய பங்கு அவருக்கு இருந்தது. தற்போது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.