“நீங்கதான் எனக்கு மகனா பொறக்கணும்”….. குக் வித் கோமாளி புகழ் உருக்கம்…. பலரையும் கலங்க வைத்த பதிவு….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் புகழ். அந்நிகழ்ச்சியில் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறிய இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இருந்தாலும் விஜய் டிவி கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் காமெடிகளுக்கு அளவே இல்லை. அந்நிகழ்ச்சியை தொடங்க இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது சபாபதி, வலிமை, யானை மற்றும் என்ன சொல்லப் போகிறாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில பட வாய்ப்புகளும் இவர் கைவசம் வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் Zoo கீப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் புகழ் 5 வருடமாக காதலித்து வந்த பென்சி என்பவரை அண்மையில்  திருமணம் செய்து கொண்டார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்து மற்றும் இஸ்லாமிய முறை என 2 முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை புகழ் பதிவிட்டுள்ளார். அதில்,இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மாமா உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்தை அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைக்கிறேன் உங்களுடைய ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் வேணும்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vijay Tv Pugazh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vijaytvpugazh)

கண்டிப்பாக நீங்கதான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுளை வேண்டுகிறேன் மாமா என்று மறைந்த காமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் திருமண நாளான இன்று அவரை வணங்கி இந்த உருக்கமான பதிவை புகழ் பதிவிட்டுள்ளார்.