“தனுஷ் அப்பவே அப்படி”…. குடும்பத்துடன் அவுட்டிங்…. இணையத்தில் வெளியான தனுஷின் சிறு வயது புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் தமிழ் சினிமாவையும் தாண்டி பாலிவுட்டில் நுழைந்துள்ளார். அவ்வகையில் அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான தி கிரேட் மேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சில மாதங்களாக தனது திரைப்படங்கள் ஹிட் கொடுக்காததால் வருத்தத்தில் இருந்து வந்த தனுஷ் அதனை ஏறக்குறைய தற்போது சரி செய்து விட்டார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட அந்த திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் நானே ஒருவன் மற்றும் வாத்தி ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இதனிடையே நடிகர் தனுஷ் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குனர் செல்வராகவனின் தம்பியும் என்பதை நாம் பலரும் அறிந்திருப்போம்.இந்நிலையில் தனுஷ் தனது குடும்பத்துடன் வெளியே சென்று இருந்த போது எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.