“யாருக்கும் நான் வந்தது தெரியக்கூடாது”…. நடராஜர் கோவிலில் சாய்பல்லவி செய்த செயல்….. கோவிலில் குவிந்த ரசிகர்கள்….!!!!

தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி. என்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் தியா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடிக்க தொடங்கினார். இவரரின் நடிப்பில் அண்மையில் வெளியான கார்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கௌதம் ராமச்சந்திரன் இயக்கிய இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி உடன் காளி வெங்கட், ஆர் எஸ் சிவாஜி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் திடீரென குடும்பத்துடன் சாய் பல்லவி நடராஜர் கோவிலுக்கு வந்துள்ளார். யாரும் அவரை அடையாளாம் கண்டு விடக்கூடாது என்பதற்காக முகக் கவசத்துடன் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசனம் செய்தார்.அவர் கோவிலுக்கு வந்த செய்தி தீயாய் பரவிய நிலையில் ஏராளமான ரசிகர்கள் கோவிலில் கூடினர். அதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு சாய்பல்லவி தன்னுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டவர்கள் அனைவருடனும் மிகவும் பொறுமையாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிறகு போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து தீர்த்த பிரசாதங்கள் வாங்கிக் கொண்டு கோவிலில் இருந்து புறப்பட்டார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தின் வைரலாகி வருகின்றன.