ராஜா ராணி 2 சீரியல் பிரபலத்திற்கு….. திடீரென நடந்து முடிந்த திருமணம்…. குவியும் வாழ்த்துக்கள்…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. மிகுந்த விறுவிறுப்புடன் பல்வேறு திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜா ராணி சீரியல் முடிவடைந்த நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியல் குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.அதிலும் குறிப்பாக டிஆர்பி யில் முதலிடத்தில் உள்ளது. இதில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நினைவாக கொண்டு போராடும் பெண்ணின் கதை ஒரு பக்கமும், மறுபக்கம் தனது மனைவியை எப்படியாவது ஐபிஎஸ் ஆக்கிவிட வேண்டும் என்று கணவரின் துடிப்புடன் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடித்து வருகிறார். சந்தியா கதாபாத்திரத்தில் முதலில் ஆலியா நடித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்திருக்கும் நிலையில் ஆலியா மானசாவிற்கு பதிலாக ரியா என்பவர் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது சீரியலில் ஆதி, ஜெஸ்ஸியை காதலித்து கர்ப்பம் ஆக்கி ஏமாற்றி விடுகிறார்.

இது ஒரு கட்டத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிய வர தற்போது காதையின் மீது குடும்பமே கோபத்தில் இருக்கிறது.ஆதி மற்றும் ஜெசி திருமணம் நடக்குமா என்று பல்வேறு திருப்பங்களுடன் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது.இதனிடையே சீரியலில் காமெடி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அர்ச்சனா சமீபத்தில் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக மற்றொரு நடிகை தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியல் நடிகர் திருமணம் செய்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியலில் சரவணனின் தம்பி செந்தில் கதாபாத்திரத்தில் நடிக்கும் பாலாஜி தியாகராஜன் திருமணம் செய்துள்ளார்.

சீரியலில் மட்டுமல்லாமல் சில குறும் படங்களிலும் நடித்தவர். இவர் நேற்று திருமணம் செய்து கொண்ட நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவருடைய திருமணத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர். ராஜா ராணி 2 குழுவினர் பாலாஜியின் திருமணத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்திய நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.