வெளிநாட்டில் தியேட்டருக்கு மனைவி, மகளுடன் சென்ற ரஜினிகாந்த்…. பலரும் பார்க்காத அன்சீன் புகைப்படம் இதோ….!!!!

தனது நடிப்பால் ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் கட்டி போட்டவர். சர்வதேச அளவில் தமிழ் சினிமாவை கொண்டு சென்ற புகழ் நடிகர் ரஜினிக்கு அதிகமாகவே இருக்கின்றது. இவரின் இந்த ராஜாங்கம் தமிழ் சினிமா உலகில் 47 வருடங்களாக கொஞ்சம் கூட குறையாமல் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. சில படங்கள் வெற்றி தோல்விகளை சந்தித்தாலும் இந்த வயதிலும் எனர்ஜி குறையாமல் அப்படியே இருக்கிறார் ரஜினி.

தற்போது இயக்குனர் நெல்சன் திலிக்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் தமன்னா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் சூட்டிங் பெரிய ஜெயில் செட் உடன் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் அன்சின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் அதனை அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள். அவ்வகையில் ரஜினிகாந்த் வெளிநாட்டில் தனது மனைவி மற்றும் மகளுடன் திரையரங்கிற்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.