2வது திருமணம் செய்த நடிகை அமலாபால்….. வெளிவந்த ஆதாரம்….. தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஜாமீன்…..!!!

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். மலையாள நடிகை ஆன இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். பிரபு சாலமன் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றார்.

அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள் மற்றும் தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் முப்பொழுதும் என் கற்பனை, வேட்டை மற்றும் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்தார். பின்னர் இயக்குனர் விஜயை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மூன்று வருடங்கள் மட்டுமே திருமண வாழ்க்கையை அனுபவித்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனிடையே அமலா பாலுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திரைப்படத் தொழிலில் பஞ்சாப்பை சேர்ந்த பவிந்தர் சிங் தத் என்பவரருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி தொழில் செய்து வந்துள்ளனர்.

அப்போது அமலாபாலை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறி பவிந்தர் சிங் பலமுறை அமலாபாலுடன் ஒன்றாக இருந்துள்ளார். அதன் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.இதனிடையே அவர் அமலாபாலிடம் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக கூறி மிரட்டல் விடுத்து பண மோசடி செய்தது மட்டுமல்லாமல் பொருளாதாரம் மற்றும் தொழில் ரீதியாக துன்புறுத்தி வந்த நிலையில் அமலா பால் தரப்பில் போலீசில் கடந்த 16ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகார்  அடிப்படையில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பவீந்தர் சிங் தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பவிந்தர் சிங் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அவரின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.

 

அப்போது அமலாபாலுக்கும் தனக்கு நடந்த பதிவு திருமணச் சான்றிதழை பவிந்தர் சிங் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதற்குரிய ஆதாரத்துடன் அவர் மனு அளித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது மட்டுமல்லாமல் நடிகை அமலா பாலுக்கு பவிந்தர் சிங் உடன் இரண்டாவது திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.